/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மொபைல் போன் பறித்த ஆட்டோ டிரைவர் கைது
/
மொபைல் போன் பறித்த ஆட்டோ டிரைவர் கைது
ADDED : ஜூன் 08, 2025 12:10 AM
காசிமேடு, திருவொற்றியூர், கணக்கர் தெருவைச் சேர்ந்தவர் ஜெகன், 19; சென்னை துறைமுக ஒப்பந்த ஊழியர். இவர் கடந்த 4ம் தேதி இரவு, ராயபுரம் செல்வதற்காக, ஒண்டிக்குப்பத்தில் ஆட்டோவில் ஏறி பயணம் செய்தார்.
ஆட்டோ ஓட்டுநர் திடீரென காசிமேடு சுடுகாடு உட்புறம் ஆட்டோவை நிறுத்தி, அவரது நண்பர்களுடன் சேர்ந்து, ஜெகனை மிரட்டி, மொபைல் போனை பறித்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்கு பதிந்து, மொபைல் போன் பறித்த வண்ணாரப்பேட்டை, நாகூரான் தோட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கவுதம், 23, தண்டையார்பேட்டை, பல்லவன் நகரைச் சேர்ந்த நவீன், 25, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
நவீன் மீது கொலை முயற்சி உட்பட இரு வழக்குகளும், கவுதம் மீது திருட்டு வழக்கும் உள்ளது.