/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'தினமலர்' கிரிக்கெட் லீக்கில் இன்று இறுதி போட்டி சால்காம்ப் - இன்போசிஸ் சென்னை அணி மோதல்
/
'தினமலர்' கிரிக்கெட் லீக்கில் இன்று இறுதி போட்டி சால்காம்ப் - இன்போசிஸ் சென்னை அணி மோதல்
'தினமலர்' கிரிக்கெட் லீக்கில் இன்று இறுதி போட்டி சால்காம்ப் - இன்போசிஸ் சென்னை அணி மோதல்
'தினமலர்' கிரிக்கெட் லீக்கில் இன்று இறுதி போட்டி சால்காம்ப் - இன்போசிஸ் சென்னை அணி மோதல்
ADDED : ஜூன் 08, 2025 12:09 AM

சென்னை 'தினமலர்' நாளிதழ் மற்றும் 'நம்ம பேமிலி குரூப்' இணைந்து, டி.சி.எல்., என்ற பெயரில், 'தினமலர் கார்ப்பரேட் லீக்' சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியை நடத்துகின்றன.
உடன், பார்வதி ஹாஸ்பிட்டல் கார்ப், ஸ்போர்டஸ், கிட்டே புட்டே, எச்.டி.எப்.சி., வங்கி, அக் ஷயகல்பா, ட்ராப்டேக்ஸி, ஜி.ஓ.சி., ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.
வேளச்சேரி அடுத்த மேடவாக்கம், சந்தோஷபுரம், சுமங்கலி கிரிக்கெட் மைதானத்தில், 20 ஓவர் அடிப்படையில், 'சூப்பர் நாக் - அவுட்' முறையில் நடக்கும் இப்போட்டிகள், கடந்த 24ல் துவங்கி, இன்றுடன் நிறைவடைகிறது.
மொத்தம் 32 அணிகளில் 28 அணிகள் வெளியேறிய நிலையில், நேற்று காலை நடந்த அரையிறுதி சுற்றில், சால்காம்ப் அணியுடன், எச்.சி.எல்.டெக்., சூப்பர்நோவாஸ் அணி மோதியது.
இதில், முதலில் களமிறங்கிய சால்காம்ப் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழந்து 154 ரன்களை எடுத்தது.
அதிகபட்சமாக அணி வீரர்கள் கோபால், 40 பந்துகளை எதிர்கொண்டு ஐந்து பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 56 ரன்கள், சுகனேஷ், 21 பந்துகளில் மூன்று பவுண்டரி, இரு சிக்ஸ் உட்பட 31 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய எச்.சி.எல்.டெக்., சூப்பர்நோவாஸ் அணி, 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்கள் எடுத்து, எதிர் அணியிடம் 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
எச்.சி.எல்.டெக்., சூப்பர்நோவாஸ் அணியின் சார்பில், அதிகபட்சமாக சாஷி, 12 பந்துகளை எதிர்கொண்டு மூன்று பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 20 ரன்கள்; பிரவின்குமார், 17 பந்துகளில் இரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 24 ரன்கள் எடுத்தனர்.
இப்போட்டியில், நான்கு விக்கெட் வீழ்த்திய சுகனேஷ் சிறந்த பந்து வீச்சாளர் மற்றும் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த மட்டையாளராக கோபால் தேர்வு செய்யப்பட்டார்.
மற்றொரு போட்டியில் இன்போசிஸ் சென்னை டி.சி., அணியுடன்,எஸ்.சி., புளூஸ் அணி மோதியது. முதலில் களமிறங்கிய இன்போசிஸ் சென்னை டி.சி., அணி, துவக்கம் முதலே அடித்து ஆடி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக பாபு கைலாஷ், 42 பந்துகளில் நான்கு பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 54 ரன்கள்; சஞ்சு 25 பந்துகளில், இரு பவுண்டரி, இரு சிக்ஸ் உட்பட 33 ரன்கள் எடுத்தனர்.
இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய எஸ்.சி., புளூஸ் அணி, கடுமையாக போராடி, 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 39 ரன்கள் வித்தியாசத்தில், இன்போசிஸ் சென்னை டி.சி., அணி வெற்றி பெற்றது.
எஸ்.சி., புளூஸ் அணி சார்பில், அதிகபட்சமாக நசீர் உசேன், 17 பந்துகளில் நான்கு பவுண்டரி உட்பட 21 ரன்களும், சக்தீஷ் 16 பந்துகளில் 18 ரன்களும் எடுத்தனர்.
இப்போட்டியில், நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிய கோபிநாத் ஆட்டநாயகனாகவும், சிறந்த பந்து வீச்சாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த மட்டையாளராக பாபுகைலாஷ் தேர்வானர்.
இன்று நடக்கும் இறுதி போட்டியில், வெற்றி பெற்ற சால்காம்ப் மற்றும் இன்போசிஸ் சென்னை டி.சி., அணிகள் பங்கேற்கும். நேற்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்த அணிகளில், ரன் ரேட் அடிப்படையில், முன்னிலையில் உள்ள அணி, மூன்றாம் இடத்திற்கு தேர்வாகும்.