/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூடிய இ - -சேவை மையம் மீண்டும் திறக்க எதிர்பார்ப்பு
/
மூடிய இ - -சேவை மையம் மீண்டும் திறக்க எதிர்பார்ப்பு
மூடிய இ - -சேவை மையம் மீண்டும் திறக்க எதிர்பார்ப்பு
மூடிய இ - -சேவை மையம் மீண்டும் திறக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜன 27, 2024 12:55 AM
செம்மஞ்சேரி, செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்தில், 30,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிப்போர் தேவைக்காக, இ- -- சேவை மையம் துவக்கப்பட்டது. ஆதார் அட்டை திருத்தம், சான்றிதழ்கள் போன்றவற்றுக்காக, இம்மையத்தை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், ஒரு ஆண்டுக்கு முன் இ - சேவை மையம் மூடப்பட்டது. இதனால், தனியார் கணினி மையங்களை நாட வேண்டிய நிலை, பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அங்கு, 60 ரூபாய் கட்டணத்திற்கு பதில், 150 ரூபாய் வாங்குவதால், பகுதிமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
பகுதி மக்கள் கூறியதாவது:
செம்மஞ்சேரி மையம் மூடப்பட்டதால், 5 கி.மீ., துாரம் உள்ள சோழிங்கநல்லுார் அரசு இ - -சேவை மையத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.
பெரும்பாலான மக்கள், தினக்கூலி மற்றும் குறைந்த மாத ஊதியம் வாங்குகின்றனர். தனியார் இ - -சேவை மையத்தில் அதிகம் பணம் கொடுத்து சேவை பெற முடிவதில்லை. மக்களின் வசதிக்காக, மூடப்பட்ட இ -- சேவை மையத்தை மீண்டும் திறக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

