/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குளம் போல் தேங்கிய மழைநீரால் பயணியர் அவதி
/
குளம் போல் தேங்கிய மழைநீரால் பயணியர் அவதி
ADDED : செப் 18, 2025 06:10 PM

அய்யப்பன்தாங்கல் : அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையம் அருகே குளம் போல் தேங்கிய மழைநீரால் பயணியர் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
போரூர் அருகே உள்ள அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் பூந்தமல்லி, குன்றத்துார் உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பேருந்து நிலையம் அமைந்துள்ள மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால், அப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் முழுதும் சேதமடைந்து உள்ளது.
இந்நிலையில், நேற்று காலை பெய்த மழையில், அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையம் அருகே சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியது.
இதனால், பேருந்து நிலையத்திற்கு வந்த பயணியர், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். தொடர் மழைக்கு முன், இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.