ADDED : செப் 23, 2025 12:55 AM
சென்னை:மாவட்ட கேரம் போட்டி யில், தண்டையார்பேட்டையை சேர்ந்த தேசிய வீராங்கனையான கீர்த்தனா, தனிநபர் உட்பட மூன்று பிரிவுகளில் முதலிடம் பிடித்து அசத்தினார்.
சென்னை மாவட்ட கேரம் போட்டி, அமைந்தகரையில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. கலப்பு இரட்டையர் உள்ளிட்ட, 14 வகையான போட்டிகள் நடந்தன.
இதில், பதக்கம் அல்லாத பிரிவில், கோமதி கேரம் அகாடமியின் ஜூலியன் முதலிடத்தை பிடித்தார்.
இரட்டையர் பிரிவில், பெண்களில் கேரம் கோச்சிங் சென்டரின் கீர்த்தனா - தைலம் வர்ஷினி ஜோடியும், ஆண்களில் எல்.ஐ.சி., வீரர் திலீப் பாபு - ராணுவ வீரர் அசோக் குமார் ஜோடியும் முதலிடத்தை கைப்பற்றினர்.
கலப்பு இரட்டையர் பிரிவில், மிதுன் - கீர்த்தனா ஜோடி முதலிடத்தை வென்றது. தனிநபர் பெண்களில் கீர்த்தனாவும், ஆண்களில் கிராண்ட் ஸ்லாம் வீரர் அருண்கார்த்திக்கும் முதலிடம் பிடித்தனர்.