/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீட்கப்பட்ட மொபைல் போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
/
மீட்கப்பட்ட மொபைல் போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
மீட்கப்பட்ட மொபைல் போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
மீட்கப்பட்ட மொபைல் போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
ADDED : பிப் 24, 2024 12:15 AM
பெரும்பாக்கம், மொபைல் போன் திருடு போனது, பறிக்கப்பட்டது, காணவில்லை எனக்கூறி, பெரும்பாக்கம் காவல் நிலையத்தில், பலர் புகார் அளித்திருந்தனர்.
இவ்வாறு பெறப்பட்ட 60க்கும் மேற்பட்ட புகாரின்படி, வழக்குப் பதிவு செய்த போலீசார், அவற்றை மீட்க தனிப்படை அமைத்தனர்.
அதன்படி, புகார்தாரர்களிடமிருந்து திருடப்பட்ட மற்றும் மாயமான 55 மொபைல் போன்களை ஆந்திரா, ஹரியானா, கோல்கட்டா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உட்பட பல மாவட்டங்களில் இருந்தும், தனிப்படை போலீசாரால் மீட்கப்பட்டன.
மீட்டெடுத்த மொபைல் போன்களை, பள்ளிக்கரணை துணை ஆணையர் கவுதம் கோயல் நேற்று, உரியவர்களிடம் ஒப்படைத்தார்.