/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டு வரி பெயர் மாற்ற 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம்: நகராட்சி 'பில்' கலெக்டர் கைது

ADDED : ஜூன் 27, 2025 06:20 AM

திருவள்ளூர்: வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய, லஞ்சம் வாங்கிய திருவேற்காடு நகராட்சி 'பில்' கலெக்டர் கைது செய்யப்பட்டார்.
திருவேற்காடு, நடேசன் நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ், 43. இவர், அதே பகுதியில் இரண்டு தளங்கள் மற்றும் 3,000 சதுர அடி உடைய பழைய வீட்டை சமீபத்தில் வாங்கியுள்ளார். அதற்கு, வரி செலுத்துவதற்கு ஏதுவாக, பெயர் மாற்றம் செய்ய, கடந்த மார்ச் 10, 16ம் தேதிகளில் நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அப்போது, பெயர் மாற்றம் செய்வதற்கு, 'பில்' கலெக்டர் உமாநாத், 35, லஞ்சமாக 40,000 ரூபாய் கேட்டுள்ளார்.
கடந்த 24ம் தேதி பேசும்போது, 25,000 ரூபாய் கொடுத்தால் மட்டுமே பெயர் மாற்றம் செய்யப்படும் என, உமாநாத் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெகதீஷ், இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தார். அவர்கள், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெகதீஷிடம் கொடுத்து அனுப்பினர்.
ஜெகதீஷிடம் இருந்து அந்த பணத்தை உமாநாத் வாங்கும்போது, நகராட்சி அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., கணேசன் தலைமையிலான போலீசார், அவரை கைது செய்தனர்.