/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அஞ்சலக ஏற்றுமதி சேவை மையம் திறப்பு
/
அஞ்சலக ஏற்றுமதி சேவை மையம் திறப்பு
ADDED : ஜன 26, 2024 12:27 AM

சென்னை, இந்திய அஞ்சல் துறையின் அஞ்சலக ஏற்றுமதி சேவை மையம் வாயிலாக, 2022ம் ஆண்டு டிச., மாதம் முதல், வர்த்தக ஏற்றுமதிக்கான சுங்க அனுமதி,'ஆன்லைன்' வாயிலாக செய்யப்படுகிறது.
வணிக ஏற்றுமதியாளர்கள் இந்த இணைய மையத்தை பயன்படுத்தி, எந்த தடையும் இல்லாமல் ஏற்றுமதி 'ஆர்டர்' பெற்று வருகின்றனர்.
தமிழக ஏற்றுமதிச் சந்தையின் வளர்ச்சியை எளிதாக்கும் வகையில், அஞ்சலக ஏற்றுமதி சேவை மையம், தமிழக வட்ட கண்காணிப்பாளர், முதல் தளம், வெளிநாட்டு அஞ்சல், சென்னை - 600 001 என்ற முகவரில் நேற்று திறக்கப்பட்டது.
இதை, மெயில் மற்றும் வணிக மேம்பாட்டு அஞ்சல் துறை தலைவர் ஸ்ரீதேவி திறந்து வைத்தார்.
சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
இது ஏற்றுமதியாளர்கள் மற்றும் சர்வதேச சரக்கு கையாள்வோருக்கு பெரிதும் உதவும்.
சிறிய அளவிலான தொழில் முனைவோர், கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் மற்றும் தொழில் துவங்குவோரை கையாள்வதும், அவர்களை ஏற்றுமதி சந்தை நோக்கி செல்வதும், இந்த மையத்தின் நோக்கம்.
ஏற்றுமதியாளர்கள் தங்கள் பொருட்களை உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்கு மிகவும் நியாயமான விலையில் அனுப்பவும், நாட்டின் ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கவும், இந்தியா அஞ்சல் உதவும்.
மேலும், இந்த மையத்தின் சார்பில் மாநில மற்றும் மத்திய அரசின் துறைகள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள், சுய உதவிக் குழுவினர், அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து
'ஆன்-லைன்', நேரடியாக பயிற்சிகளை நடத்தி ஏற்றுமதியாளர்களை மேம்படுத்துகிறது.
ஏற்றுமதியாளர்களின் முன்பதிவுக்கு பிந்தைய தேவைகளுக்கான கண்காணிப்பு பிரிவாகவும் இந்த மையம் செயல்படும்.

