sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின்சாரம் தாக்கி உயிரழந்த சிறுவன் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும்: பிரேமலதா

/

மின்சாரம் தாக்கி உயிரழந்த சிறுவன் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும்: பிரேமலதா

மின்சாரம் தாக்கி உயிரழந்த சிறுவன் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும்: பிரேமலதா

மின்சாரம் தாக்கி உயிரழந்த சிறுவன் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும்: பிரேமலதா


ADDED : ஜூலை 04, 2025 12:49 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

'சென்னை, மாநகராட்சி அலட்சியத்தால், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு, தமிழக அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும்' என, தே.மு.தி.க., பொது செயலர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:

சென்னை, திருவொற்றியூர், தாங்கல் பீர் பயில்வான் தர்கா ரோடு பகுதியில், மின்சாரம் தாக்கி பிளஸ்-2 மாணவன், நபில் உயிரிழந்துள்ளார். டியூஷன் முடித்து வீடு திரும்பிய போது, பூமிக்கு அடியில் சென்ற மின் கேபிளில் மின் கசிவு ஏற்பட்டு, தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்துள்ளார். முறைகேடாக மின் கேபிள் பொருத்தி, உயிர் இழப்பிற்கு காரணமான மின் வாரியத்தின் செயல் கண்டிக்கத்தக்கது.

உடனடியாக, மின்சாரத்தை துண்டிக்க, மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை போன் செய்தும், பதில் அளிக்காமல் இருந்துள்ளனர். அப்பகுதியில், வீடுகளுக்கு மின் கேபிள்கள் வீட்டு வாசல்களிலும், மேல்புறத்திலும், முறையில்லாமல் புதைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பலமுறை மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. சிங்கார சென்னை, சீரழிந்த சென்னையாக குண்டும் குழியுமாக, மழை நீர் தேங்கி, மின்சார வயர்கள் அறுந்து, உயிர்களை பலி வாங்குவதாக உள்ளது. உயிரிழந்த சிறுவனை பிரிந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். மாநகராட்சி அலட்சியத்தால், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

★★






      Dinamalar
      Follow us