/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது இடங்களில் மஞ்ச பை இயந்திரங்கள்
/
பொது இடங்களில் மஞ்ச பை இயந்திரங்கள்
ADDED : மார் 17, 2025 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடையாறு, அடையாறு மண்டலத்தில், 13 வார்டுகள் உள்ளன. இதில், 168, 171, 172 மற்றும் 175 முதல் 180 வரை உள்ள, ஒன்பது வார்டுகளில், மஞ்சப் பை விற்பனை இயந்திரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பேருந்து நிலையம், நிறுத்தம், காய்கறி சந்தைகள் மற்றும் அதிக மக்கள் கூடும் இடங்களில், இந்த இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதற்காக, 33 லட்சம் ரூபாய் மாநகராட்சி ஒதுக்கி உள்ளது. விரைவில், மஞ்சப் பை இயந்திரங்கள் அமைக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.