/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தமிழ்நாடு சைக்கிளிங் லீக் துவக்கம் சென்னை வீரர் - வீராங்கனையர் தங்கம்
/
தமிழ்நாடு சைக்கிளிங் லீக் துவக்கம் சென்னை வீரர் - வீராங்கனையர் தங்கம்
தமிழ்நாடு சைக்கிளிங் லீக் துவக்கம் சென்னை வீரர் - வீராங்கனையர் தங்கம்
தமிழ்நாடு சைக்கிளிங் லீக் துவக்கம் சென்னை வீரர் - வீராங்கனையர் தங்கம்
ADDED : ஜூன் 08, 2025 12:00 AM

சென்னை,
இந்திய சைக்கிளிங் சம்மேளனம், தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம் இணைந்து, மூன்றாவது சீசனின் டி.சி.எல்., எனும் தமிழ்நாடு சைக்கிளிங் லீக் போட்டி, சென்னையில் நேற்று காலை துவங்கியது.
சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், பல்வேறு வயது இருபாலருக்கும், நான்கு பிரிவுகளில் தலா எட்டு சுற்றுகள் வீதம் போட்டிகள் நடந்தன.
பார்முலா கார் ரேசிங் சுற்றுப்பாதையான, 2.5 கி.மீ., துாரத்தில், நேப்பியர் பாலத்தில் துவங்கி, தீவுத்திடல் வழியாக மீண்டும் நேப்பியர் பாலத்தில் போட்டி நிறைவடைந்தது.
போட்டியின் முடிவில், 12 வயது சிறுவரில் எஸ்.டி.ஏ.டி., சித்தார்த், சிறுமியரில் சி.பி.இ., அணியின் ரக் ஷிதா; 14 வயதில் சி.பி.இ., அணியின் நிரஞ்சன் தேவராஜ், சென்னை ருச்சிர பிரபாலா ஆகியோர் முதலிடங்களை பிடித்தனர்.
அதேபோல், 16 வயதில் கரூர் ஹரிஷ் மற்றும் நம்ம சென்னை ஹர்ஷினி; 18 வயதில் கரூர் தினேஷ்வரன் மற்றும் நம்ம சென்னை நமிலா ஆகியோர் தங்கம் வென்றனர்.
இன்று கோவை பெடல்ஸ், நம்ம சென்னை ரைடர்ஸ், மெட்ராஸ் ப்ரோ ரேசர்ஸ், குமரி ரைடர்ஸ், சேலம் சூப்பர் ரைடர்ஸ், ரன்சைசர், திருச்சி ராக்போர்ட் ரைடர்ஸ், மதுரை மாஸ் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கும் போட்டிகள் நடக்கின்றன.