/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வானகரம் முருகன் கோவில் பால்குட விழா விமரிசை
/
வானகரம் முருகன் கோவில் பால்குட விழா விமரிசை
ADDED : ஜன 26, 2024 12:43 AM

மதுரவாயல், சென்னை, வானகரம் ஸ்ரீ மச்சக்கார சுவாமிநாத பாலமுருகன் திருக்கோவிலில், தைப்பூச விழாவை முன்னிட்டு, 108 பால்குட விழா நடந்தது. காலை 6:30 மணியளவில் நடை திறக்கப்பட்டு, மச்சக்கார சுவாமிநாத பாலமுருகனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
மதியம் 12:30 மணியளவில், சிறப்பு அழைப்பாளராக வந்த திரைப்பட நகைச்சுவை நடிகர் யோகிபாபு, 108 பால் குடங்களை வாங்கி, பாலமுருகனுக்கு அபிஷேகம் செய்தார்.
மாலை 3:00 மணியளவில், ராஜ அலங்காரத்தில் பாலமுருகன் அருள் பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7:30 மணிக்கு சோடசன தீபம் ஏற்றப்பட்டு, 8:30 மணியளவில் நடை சாத்தப்பட்டது.
இக்கோவிலில், தேனால் அபிஷேகம் செய்யப்பட்ட வேல் கொண்டு, இங்குள்ள குருஜி நாக்கில் எழுதிய சில மாதங்களில், வாய் பேச முடியாதோர் பேசுவதாக நம்பப்படுகிறது.
தினமும் இரவு நடை சாத்தும் முன், குருஜியின் கையில் வைக்கப்படும் பாலை முருகன் அருந்துவதாகவும் கூறப்படுகிறது.

