/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரு ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம்! உள்ளாட்சி தேர்தலுக்குள் தீர்வு தேவை
/
இரு ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம்! உள்ளாட்சி தேர்தலுக்குள் தீர்வு தேவை
இரு ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம்! உள்ளாட்சி தேர்தலுக்குள் தீர்வு தேவை
இரு ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம்! உள்ளாட்சி தேர்தலுக்குள் தீர்வு தேவை
ADDED : ஜூலை 16, 2024 01:59 AM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துக்கவுண்டனூர் கிராமத்தின் ஒரு பகுதி புரவிபாளையம் ஊராட்சியில் இருப்பதால், சிக்கல் நிலவுகிறது.
கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட சொக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துக்கவுண்டனுார் கிராமத்தின் ஒரு பகுதி புரவிபாளையத்தில் உள்ளது. இப்பகுதியில், 200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், தினமும் பல இன்னல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர்.
முத்துக்கவுண்டனூரில் வசிக்கும் மக்களுக்கு அரசு திட்டங்கள் கொண்டு சேர்ப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
மேலும், இப்பகுதி மக்களில் சிலர் புகார் தெரிவிக்க வடக்கிபாளையத்துக்கும், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி அலுவலகம் செல்ல புரவிபாளையத்துக்கும் செல்லும் நிலை உள்ளது. ரேஷன் கடை முத்துக்கவுண்டனூரில் உள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும், இப்பகுதியில் உள்ளவர்களில் ஒரு சிலருக்கு ஓட்டுரிமை இரண்டு ஊராட்சியிலும் உள்ளது. இதனால், என்ன செய்வது என தெரியாமல் மக்கள் திக்குமுக்காடுகின்றனர்.
இந்நிலையில், புரவிபாளையம் ஊராட்சியில் இருக்கும் முத்துக்கவுண்டனூருக்கு உட்பட்ட பகுதியை, சொக்கனூர் ஊராட்சியில் இணைக்க மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், ஐந்து மாதங்களில் ஊராட்சி தேர்தல் வர வாய்ப்புள்ளதால், அதற்குள் கிராமத்தை வேறு ஊராட்சியில் இணைக்கும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும், என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.