/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திங்களன்று வேண்டாமே மின் நிறுத்தம்! சிறு தொழில் உரிமையாளர்கள் கோரிக்கை
/
திங்களன்று வேண்டாமே மின் நிறுத்தம்! சிறு தொழில் உரிமையாளர்கள் கோரிக்கை
திங்களன்று வேண்டாமே மின் நிறுத்தம்! சிறு தொழில் உரிமையாளர்கள் கோரிக்கை
திங்களன்று வேண்டாமே மின் நிறுத்தம்! சிறு தொழில் உரிமையாளர்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 16, 2024 01:59 AM
பொள்ளாச்சி;திங்கட்கிழமை தவிர்த்து, வாரத்தின் பிற கிழமைகளில் மின்நிறுத்தம் செய்யுமாறு, சிறுதொழில் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி நகரில், துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், மின் சாதனங்களில் பழுது ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக, மாதம்தோறும், ஒரு நாள், மின்தடை அறிவித்து பணி நடக்கும் இடங்களில், காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுதொடர்பான விபரம், பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டும் வருகிறது. இருப்பினும், திங்கட்கிழமை தவிர்த்து, வாரத்தின் இதர கிழமைகளில் மின்நிறுத்தம் செய்ய சிறுதொழில் செய்வோர் வலியுறுத்தியுள்ளனர்.
சிறுதொழில் உரிமையாளர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஐஸ்கிரீம், பால் பதப்படுத்துதல், கயிறு தயாரித்தல், வெல்டிங் வேலை, டெய்லர் உள்ளிட்ட பல்வேறு சிறு தொழில்களை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர்.
ஞாயிறு விடுமுறை கழித்து, அனைவரும் திங்கள்கிழமை பணிக்கு வருவதுடன், வாடிக்கையாளர்களின் 'ஆர்டர்' படி, பணிகளை முடித்து கொடுப்பர்.
ஆனால், திங்கட்கிழமை மின் நிறுத்தம் செய்வதால், ஞாயிறு, திங்கள் என இரு தினங்கள் பணி புரியாத நிலை ஏற்பட்டு தொழில் பாதிக்கிறது. தொழிலாளர்களுக்கும் முழுமையாக வேலை கொடுக்க முடியாத நிலை உருவாகிறது.
எனவே, வாரத்தின் பிற கிழமைகளில், மின் நிறுத்தம் செய்யப்பட்டால், சிறு தொழில் துறையினருக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.
இவ்வாறு, கூறினர்.