/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீட் தேர்வில் அசத்திய அக்சயா அகாடமி
/
நீட் தேர்வில் அசத்திய அக்சயா அகாடமி
ADDED : ஜூன் 09, 2024 12:42 AM

கோவை;கோவை பன்னீர்மடையில் உள்ள அக்சயா அகாடமி சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளியின் மாணவர் கனீஸ்வரன், நீட் தேர்வில் 710 மதிப்பெண் பெற்று சாதித்துள்ளார்.
பள்ளியில் முதல் இடத்தையும், அகில இந்திய அளவில் 417 வது இடத்தையும் மாணவர் பெற்றுள்ளார். மேலும், 87 மாணவர்கள் 600க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் நிறுவனர் புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபி ராமன், பள்ளியின் முதல்வர் ராஜேஸ்வரி வாழ்த்தினர்.
தொடர்ந்து, முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் கனீஸ்வரனின் மருத்துவக் கல்விக்கான கட்டணத் தொகை முழுவதையும் வழங்குவதாக, பள்ளி நிர்வாகத்தினர் உறுதியளித்து, மாணவரை கவுரவப்படுத்தினர்.