ADDED : ஜூன் 09, 2024 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் பசுக்கள் மற்றும் எருமைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி, கோவை மாவட்டத்தில் நாளை (10ம் தேதி) துவங்கி, தொடர்ந்து, 21 நாட்களுக்கு அனைத்து கிராமங்களிலும் நடைபெற உள்ளது.
இதற்கான தடுப்பூசி குளிரூட்டும் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கிறது.
விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களது பசுக்கள், எருமைகள் மற்றும் நான்கு மாதத்துக்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட வேண்டுமென, கலெக்டர் கிராந்திகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.