/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
ADDED : ஜூலை 16, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, வடபுதூரில் உள்ள எஸ்.எம்.என்., திருமண மண்டபத்தில், இன்று (16ம் தேதி) மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடக்கிறது.
வடபுதூர், குதிரையாலம்பாளையம், பொட்டையாண்டிபுரம்பு மற்றும் சொக்கனூர் ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கு சிறப்பு முகாம் நடக்கிறது. முகாமில், 15 அரசு துறைகள் பங்கேற்க உள்ளதால், மக்கள் அனைவரும் தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி, அதனுடன் உரிய ஆவணங்கள் கட்டாயம் எடுத்து வர வேண்டும், என, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதீஸ்குமார் மற்றும் விஜயகுமார் தெரிவித்தனர்.