/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொடர்ந்து கோர்ட் புறக்கணிப்பு வக்கீல் சங்க பொதுக்குழு ஆதரவு
/
தொடர்ந்து கோர்ட் புறக்கணிப்பு வக்கீல் சங்க பொதுக்குழு ஆதரவு
தொடர்ந்து கோர்ட் புறக்கணிப்பு வக்கீல் சங்க பொதுக்குழு ஆதரவு
தொடர்ந்து கோர்ட் புறக்கணிப்பு வக்கீல் சங்க பொதுக்குழு ஆதரவு
ADDED : ஜூலை 16, 2024 12:45 AM
கோவை;கோவையில் தொடர்ந்து கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட, வக்கீல் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வக்கீல்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தை வரும் 30ம் தேதி வரை தொடர்வது என, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டுக்குழு (ஜேக்) தீர்மானம் நிறைவேற்றியது.
ஜேக் வேண்டுகோள் படி, கோவையில் அனைத்து நீதிமன்றங்களை புறக்கணிக்க, கோவை வக்கீல் சங்கம் முடிவு செய்தது. இதற்கு பா.ஜ., வை சேர்ந்த ஒரு பிரிவு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தை வாபஸ் பெற கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, கோவை வக்கீல் சங்க அவசர பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது. பங்கேற்ற வக்கீல்களிடம் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பெரும்பான்மை வக்கீல்கள் போராட்டத்தை தொடர, ஆதரவு தெரிவித்தனர். இதனால், 30ம் தேதி வரை, கோர்ட் புறக்கணிப்பு தொடர்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.