/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழைக்கால நோய்களை தடுக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை
/
மழைக்கால நோய்களை தடுக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை
மழைக்கால நோய்களை தடுக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை
மழைக்கால நோய்களை தடுக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை
ADDED : ஜூலை 16, 2024 12:46 AM
கோவை;மழைப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், டெங்கு, காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
மாநகராட்சி நகர் நல அலுவலர்(பொறுப்பு) பூபதி கூறியதாவது:
தற்போது மழை தீவிரமடைந்துள்ளதால் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொசு ஒழிப்புக்கு, வார்டுக்கு எட்டு பேர் வீதம், 800 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள, தனியார் மற்றும் நகர் நல மையங்களில் காய்ச்சல் பாதித்தவர்கள் தகவல்கள் பெறப்பட்டு, அவர்கள் குடியிருப்பு பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
காய்ச்சல் பாதித்திருந்தாலே, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுதவிர, காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில், மேற்கொள்ளப்படும் தடுப்பு பணிகள் கண்காணிக்கப்படுகின்றன. மண்டலத்துக்கு, 40 பேர் என, 200 பேர் நீர் தேங்கும் பகுதிகளை ஆய்வு செய்து, அங்கு கொசு உற்பத்திக்கான சாத்திய கூறுகளை அழிக்கும் பணியில்ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.