/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை சேகரிப்பை முறைப்படுத்த கோரிக்கை
/
குப்பை சேகரிப்பை முறைப்படுத்த கோரிக்கை
ADDED : ஜூன் 18, 2024 11:52 PM
கோவை;கோவை மாநகராட்சி நிர்வாகம் குப்பை சேகரிப்பையும், துாய்மை வாகனங்கள் முறையாக கழிவுகளை சேகரிப்பதையும் முறைப்படுத்த வேண்டும் என்று, மா.கம்யூ.,வலியுறுத்தியுள்ளது.
மா.கம்யூ., செயற்குழு கூட்டம், கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:
கோவை மாநகர தெருக்களில் குப்பை தேங்கி கிடப்பது தொடர்கிறது. ஏற்கனவே இருந்த குப்பை தொட்டிகள் அப்புறப்படுத்தப்பட்ட பின், மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக வீடுகளில் குப்பை பெறுவதில் நடைமுறை சிரமம் இருந்து வருகிறது.
குறிப்பிட்ட நேரத்துக்கு குப்பை சேகரிக்க வாகனங்கள் வருவதில்லை. அந்த வாகனங்கள் பழுது அடைந்தால், மாற்று வாகனமும் ஏற்பாடு செய்வதில்லை.
இதனால், வீட்டின் வெளியே வைக்கப்படும் குப்பையை, தெருநாய்கள் அலங்கோலப்படுத்தி விடுகின்றன. அதனால் மாநகராட்சி நிர்வாகம் மாநகர் முழுக்க உள்ள வீடுகளில் குப்பை சேகரிப்பதையும், துாய்மை வாகனங்கள் முறையாக கழிவுகளை சேகரிப்பதையும் முறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மா.கம்யூ., மாவட்டக்குழு செயலாளர் பத்மநாபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.