/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய கிக் பாக்ஸிங் போட்டி :கோவை வீரர்கள் அசத்தல்
/
தேசிய கிக் பாக்ஸிங் போட்டி :கோவை வீரர்கள் அசத்தல்
ADDED : ஜூன் 18, 2024 11:53 PM

கோவை;மேற்கு வங்கத்தில் நடந்த, தேசிய அளவிலான ஜூனியர் கிக் பாக்ஸிங் போட்டியில், கோவை வீரர்கள் நான்கு பதக்கங்கள் வென்றனர்.
வாக்கோ இந்தியா கிக் பாக்ஸிங் சம்மேளனம், மேற்கு வங்கம் ஸ்போர்ட்ஸ் கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில், 'தேசிய ஜூனியர் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2024' போட்டி, மேற்கு வங்கத்தில் நடந்தது.
இப்போட்டியில், நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டனர். தமிழக அணி சார்பில், சுமார் 60 பேர் பங்கேற்றனர். இதில், கோவை ஆண்ட்லீ பிளாக் பெல்ட் அகாடமி சார்பில் பங்கேற்ற, மாணவர்கள் அபிஷேக் (தங்கம்), தர்ஷன் (தங்கம்), சஞ்சய் (வெள்ளி), சபரிபாலா (வெண்கலம்) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு, நான்கு பதக்கங்களை வென்று அசத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களை, கிக் பாக்ஸிங் சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் பாராட்டினர்.