/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
/
மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 24, 2024 12:57 AM

கோவை;தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்தும், ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு வழங்கப்படாததை கண்டித்தும், அ.தி.மு.க.,வினர் நேற்று கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ.,அம்மன் அர்ஜூனன், தலைமை தாங்கி பேசுகையில், ''விடியலை தருகிறோம் என்று கூறியவர்கள், தமிழகத்தில் விடியலை ஏற்படுத்தவில்லை. வரும், 2026ம் ஆண்டு மீண்டும் பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் அனைத்து மக்களின் வரவேற்பு பெற்ற ஆட்சி நடைபெறும். மக்கள் திருப்பி அடிக்க தயாராகி விட்டார்கள்,'' என்றார்.
எம்.எல்.ஏ., ஜெயராம் பேசுகையில், “தி.மு.க.,வுக்கு வாக்களித்த மக்களுக்கு மின்கட்டண உயர்வு போன்ற பரிசைதான் அவர்கள் கொடுத்துள்ளார்கள். 2006- -2011ல் தி.மு.க., ஆட்சி இழப்பதற்கு மின்சாரம் தான் காரணம். இப்போது மீண்டும் அந்த சூழ்நிலை வந்துவிட்டது,'' என்றார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மின் கட்டண உயர்வை கண்டிக்கும் வகையில், அரிக்கேன் விளக்குகளை ஏந்தி, தி.மு.க., அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.