/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொண்டாமுத்தூர் அரசு கல்லூரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
/
தொண்டாமுத்தூர் அரசு கல்லூரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
தொண்டாமுத்தூர் அரசு கல்லூரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
தொண்டாமுத்தூர் அரசு கல்லூரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 24, 2024 12:55 AM
தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், பி.ஏ., ஆங்கிலம், பொருளாதாரம், பி.எஸ்.சி., கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம் என, கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், பி.பி.ஏ., பி.காம்., (சி.ஏ.,), பி.காம்., (பி.ஏ.,),
பி.ஏ., (பொருளாதாரம்), பி.ஏ., (ஆங்கிலம்), பி.எஸ்.சி., கணிதம் ஆகிய ஆறு பாடப்பிரிவுகள் உள்ளது. இந்தாண்டு, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. அதன்பின், கடந்த மே மாதம், தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, பல கட்ட கலந்தாய்வு நடந்தது.
இந்நிலையில், பி.ஏ., ஆங்கிலம், பொருளாதாரம், பி.எஸ்.சி., கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில், காலியிடங்கள் உள்ளதால், அவ்விடங்களை, தமிழக அரசின் உத்தரவுப்படி, கல்லூரியில் நேரடியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் அவ்விடங்கள் நிரப்பப்படும்.
எனவே, ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பிக்காதவர்கள், கல்லூரியில் நேரடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என, கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தெரிவித்துள்ளார்.