/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வசிக்கும் வீடு சொந்தமாகுமா? தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
/
வசிக்கும் வீடு சொந்தமாகுமா? தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
வசிக்கும் வீடு சொந்தமாகுமா? தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
வசிக்கும் வீடு சொந்தமாகுமா? தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 16, 2024 01:57 AM
வால்பாறை;வால்பாறையில் பல்வேறு எஸ்டேட்களில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று தலைமுறையாக, தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, சொந்தமாக வீடு கூட இல்லை.
தொழிலாளர்கள் கூறியதாவது:
வால்பாறை மலைப்பகுதியில், வனவிலங்குகளின் மத்தியில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தினக்கூலியாக, தற்போது, 445.30 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.
சமீப காலமாக எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் தொல்லையாலும், குறைவான கூலி வழங்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இனியும் தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டு வெளியேறாமல் இருக்க, எஸ்டேட் பகுதியில் வசிக்கும் வீடுகள், தொழிலாளர்களுக்கே சொந்தமாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.