/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மாவட்டத்தில் கடன் இலக்கு ரூ.64,682 கோடி
/
கோவை மாவட்டத்தில் கடன் இலக்கு ரூ.64,682 கோடி
ADDED : ஜூன் 28, 2024 07:31 AM

கோவை: கோவை மாவட்டத்தில் 2024 -25 ஆண்டிற்கு வங்கிகள் வாயிலாக 64,682 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்தது. கோவை மாவட்ட வங்கிகளின் ஆண்டு கடன் திட்டம் (ஏ.சி.பி.) புத்தகத்தை கலெக்டர் வெளியிட்டு பேசியதாவது:
கோவை மாவட்டத்தில் வங்கிகளின் மூலம் 2024-25 ஆம் ஆண்டு 64,682 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நபார்டு வங்கியின் உத்தேச கடன் இலக்கை ஆதாராமாய் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
2024-25ஆம் ஆண்டிற்கான கடன் திட்டத்தில் விவசாயத்துக்கு 26,789 கோடியும், சிறு குறு நடுத்தர தொழில் மையத்துக்கு 35,661 கோடியும், பிற முன்னுரிமை கடன்களுக்கு 2,231 கோடி என மொத்தம் 64,682 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 17,053 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் இரண்டு மாணவர்களுக்கு உயர்கல்வி பயில 1.49 இலட்சம் கல்வி கடன் பெறும் உத்தரவுகளை கலெக்டர் கிராந்திகுமார் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜிதேந்திரன், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் திருமலா ராவ், கனரா வங்கி முதுநிலை மேலாளர் ஈஸ்வரமூர்த்தி திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சந்திரா,உள்ளிட்ட வங்கியாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.