/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராம சுகாதார செவிலியர் சங்க பொதுக்குழு கூட்டம்
/
கிராம சுகாதார செவிலியர் சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜூலை 14, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம், கோவை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது.
மாநில தலைவர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். சுகாதார துறையில் சம வேலைக்கு, சம ஊதியம் என்பதன் அடிப்படையில் சுகாதார ஆய்வாளர்களுக்கு, ஐந்தாண்டுகள் முடிந்தவுடன் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
அதேபோல, அதே பயிற்சி முடித்த கிராம சுகாதார செவிலியர்களுக்கும் கிரேடு-1 வழங்க வேண்டும். 2,500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதில், 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.