/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
158 கிலோ குட்கா பறிமுதல் :கேரள இளைஞர் கைது
/
158 கிலோ குட்கா பறிமுதல் :கேரள இளைஞர் கைது
ADDED : அக் 20, 2025 10:56 PM
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே கேரள மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட, 158 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இளைஞர் ஒருவரை, போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் அருகே, சிறுமுகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலாங்கொம்பு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டனர். அப்போது, வாகன தணிக்கை மேற்கொண்டதில், கேரள மாநிலத்தில் இருந்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, குட்கா பொருட்களை ஏற்றி வந்த காரை போலீசார் பிடித்தனர்.
போலீசார் விசாரணையில், காரில் இருந்தவர் கேரள மாநிலம் மண்ணார்காடு பகுதியை சேர்ந்த ஜிஸ்னு, 28, என தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டார். 158 கிலோ குட்கா பொருட்கள், காரை போலீசார் கைப்பற்றினர்.

