/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
/
அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
ADDED : அக் 20, 2025 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்: கோவை, மதுக்கரை -- நீலம்பூர் பைபாஸ் சாலையில், கஞ்சிக்கோணாம்பாளையம் பிரிவை அடுத்து, சிறிது தொலைவில் கல்வெர்ட் ஒன்று உள்ளது. மழையால் அவ்விடத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. அவ்விடத்தில் துர்நாற்றம் வீசியுள்ளது. அவ்வழியே சென்றவர்கள் பார்த்தபோது ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்தது.
தகவலறிந்த போத்தனூர் போலீசார் சடலத்தை மீட்டனர். சுமார், 30- - 50 வயது மதிக்கத்தக்க இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், கொலை செய்யப்பட்டாரா என விசாரிக்கின்றனர்.

