/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையை கடக்க முயன்ற நீதிபதி, டூவீலர் மோதி பலி
/
சாலையை கடக்க முயன்ற நீதிபதி, டூவீலர் மோதி பலி
ADDED : ஜூலை 16, 2024 05:35 PM

பொள்ளாச்சி : சாலையை கடக்க முயன்ற மாவட்ட நீதிபதி, இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பொள்ளாச்சி அருகே சின்னாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி, 58. இவர் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வந்தார். சொந்த வேலை காரணமாக அவரது வீட்டில் இருந்து காரில் வந்த நீதிபதி உடுமலை ரோட்டில் காரை நிறுத்திவிட்டு இறங்கி ரோட்டை கடக்க முயன்றார்.
அப்போது, பொள்ளாச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த நபர் நீதிபதி மீது மோதினார். நிலை தடுமாறி கீழே விழுந்த நீதிபதி கருணாநிதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொள்ளாச்சி கிழக்கு போலீசார் இறந்த நீதிபதி கருணாநிதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
விபத்தை ஏற்படுத்திய நபர் குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.