தொடர் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக ஸ்ரீதர் நியமனம்
தொடர் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக ஸ்ரீதர் நியமனம்
UPDATED : ஜூலை 16, 2024 07:14 PM
ADDED : ஜூலை 16, 2024 06:17 PM

சென்னை: ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஆக இருந்த முரளிதரன் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் புதிய கமிஷனராக ஸ்ரீதர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழகத்தில் இன்று ( ஜூலை 16) காலை உள்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் 10 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மாலை மேலும் பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
* டில்லியில் உள்ள தமிழக இல்லத்தின் கூடுதல் கமிஷனர்- ஆஷிஷ்குமார்
* போக்குவரத்துத் துறை கமிஷனர் - ஜடக் சிரு
* கைத்தறித்துறை இயக்குநர் - சண்முக சுந்தரம்
* மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கமிஷனர் - கஜலட்சுமி
* மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இயக்குநர் - கார்த்திகா
* சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநர்- மோகன்
* ஜவுளித்துறை கமிஷனர் - ஜெயகாந்தன்
* ஈரோடு வணிக வரித்துறை இணை கமிஷனர்- தாக்கரே சுபம் தியோன்தர் ராவ்
* தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சொசைட்டி இயக்குநர்- சீதாலட்சுமி
* தொழில்முனைவோர் மேம்பாட்டு இயக்குநர் அமிர்த ஜோதி
* கால்நடைத்துறை கமிஷனர் - மகேஷ்வரி
* தொழில்நுட்ப கல்வி கமிஷனர் - ஆபிரஹாமும்
* குழந்தைகள் வளர்ச்சி திட்டங்களின் இயக்குநர் -மெர்சி ராணியும்
* ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் - ஸ்ரீதரும்
* சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநர் - முரளிதரன்
* ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை கமிஷனர் - ஆனந்த குமார்
* தமிழக சுகாதார திட்டங்களின் இயக்குநர் - அருண் தம்புராஜூ
* தமிழக மின்னணு ஆணைய தலைவர் மற்றும் மின்னணு நிர்வாக இயக்குநர் கோவிந்த ராவ்
*ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத்துறை கூடுதல் இயக்குநர் - ஷரண்யா ஆரி
* குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை திட்ட இயக்குநர் - ஜானி டாம் வர்கீஸ்
* கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்- காயத்ரி கிருஷ்ணன்
* நில சீர்திருத்தத்துறை கமிஷனர் - சங்கர்
* தொழிற்சாலைகள் மற்றும் வணிகத்துறை கூடுதல் கமிஷனர் - சிவ சவுந்திரவள்ளி
* பேரிடர் மேலாண்மை இயக்குநர் - மோகனசந்திரன்
* ஹிந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் - சுகுமார்
* தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு கூடுதல் மேலாண் இயக்குநர் - பொற்கொடி
* தமிழக சிறுதொழில் வளர்ச்சி கழகத்தின் செயலாளர் - கார்த்திக்
* தமிழக பாடநூல் கழக மேலாண் இயக்குநர் - சங்கர்
* தமிழக காதி மற்றும் கிராமப்புற தொழிற்சாலை வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி - மகேஷ்வரி
* தமிழக சாலை திட்டங்களின் திட்டஇயக்குநர் - ராமன்
*தமிழக கடல்சார் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி- வள்ளலார்
*சென்னை மெட்ரோபொலிட்டன் வளர்ச்சி ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி - கற்பகம்
*தமிழக சிமென்ட் கழக நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அஜய் யாதவ் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.