/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புகையிலை பயன்பாட்டை தடுக்க பலுான் பறக்கவிட்டு விழிப்புணர்வு
/
புகையிலை பயன்பாட்டை தடுக்க பலுான் பறக்கவிட்டு விழிப்புணர்வு
புகையிலை பயன்பாட்டை தடுக்க பலுான் பறக்கவிட்டு விழிப்புணர்வு
புகையிலை பயன்பாட்டை தடுக்க பலுான் பறக்கவிட்டு விழிப்புணர்வு
ADDED : மே 27, 2025 08:35 PM
கோவை : கோவை உக்கடம் பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள, மாநகராட்சி செய்முறை பயிற்சி மையத்தில் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, ஓவியம், விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் போட்டிகளை கலெக்டர் நேற்று துவங்கி வைத்து, விழிப்புணர்வு வண்ண பலூன்களை பறக்கவிட்டார்.
இதில் கலெக்டர் பேசியதாவது:
உலக புகையிலை ஒழிப்பு தினம், ஒவ்வொரு ஆண்டும் மே 31ல் கடைபிடிக்கப்படுகிறது. போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க, விழிப்புணர்வு போட்டிகள், கோவை மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போதைப் பழக்கம், இளம் தலைமுறையை பாதித்து வரும் தீவிரமான பிரச்னை. இதை தடுக்கும் நோக்கில், 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணவ மாணவியர் மற்றும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இப்போட்டியில் இணையவழியாகவும் பங்கேற்க, தனியே ' க்யூஆர் 'குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
வெற்றி பெறும் மாணவர்களுக்கு, முதல், இரண்டாவது, மற்றும் மூன்றாம் பரிசுகள் வரும் 31ல் நடத்தப்படும், 'உலக புகையிலை ஒழிப்பு தின' விழாவில் வழங்கப்படும்.
இவ்வாறு, கலெக்டர் கூறினார்.
எஸ்.பி., கார்த்திகேயன். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர், கலால் துறை துணை கமிஷனர் பழனிகுமார், மாணவ மாணவியர், பொதுமக்கள் பங்கேற்றனர்.