/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜூன் 2ல் பள்ளிகள் திறப்பு; துாய்மை பணிகள் தீவிரம்
/
ஜூன் 2ல் பள்ளிகள் திறப்பு; துாய்மை பணிகள் தீவிரம்
ADDED : மே 27, 2025 08:35 PM

கோவை : கோவை மாவட்டத்தில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் வரும் ஜூன் 2ம் தேதியன்று திறக்கப்படும் நிலையில், அதற்கான ஆயத்த பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
பள்ளி வளாகத்தில் உள்ள புதர்கள் வெட்டப்படுவதுடன், தேங்கிய மழைநீர், குப்பை மற்றும் தேவையற்ற பொருட்கள் அகற்றப்படுகின்றன.
கழிப்பறைகள் மற்றும் குடிநீர் தொட்டிகளில், பிளீச்சிங் பவுடர் துாவி, கிருமி நீக்கம் செய்யப்படுகிறது.
மேலும் பள்ளிக் கட்டடங்களின் சுவர்களுக்கு வெள்ளை அடிக்கப்படும் பணிகள் மேற்கொள்ளப்படுவதோடு, மேசைகள், பெஞ்சுகள், கரும்பலகைகள் ஆகியவற்றுக்கும் புதிதாக வண்ணம் பூசப்பட்டு வருகிறது.
அதே நேரம் சித்தாபுதூர், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படும், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், புதிதாக கட்டப்பட்டு வரும் வகுப்பறைகள், கழிப்பறை கட்டுமான இன்னும் முடியவில்லை.