/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை - பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயில் இயக்கம் மாற்றம்
/
கோவை - பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயில் இயக்கம் மாற்றம்
கோவை - பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயில் இயக்கம் மாற்றம்
கோவை - பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயில் இயக்கம் மாற்றம்
ADDED : ஜூலை 03, 2025 10:32 PM
திருப்பூர்; 'ஓசூர் அருகே ரயில்வே யார்டில் பணி நடப்பதால், கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயில் ஜூலை 6ம் தேதி ஓசூர், தர்மபுரி செல்லாது; மாற்றுப்பாதையில் இயக்கப்படும்,' என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் அடுத்த, மாரநாயக்கனஹள்ளி ரயில்வே யார்டில், வலுவூட்டப்பட்ட சிமென்ட் கான்கிரீட் பெட்டி நிறுவும் பணி நடக்கிறது. இதனால், இவ்வழியாக செல்லும் ரயில்கள் இயக்கம் வரும், 6ம் தேதி மாற்றப்பட்டுள்ளது. அவ்வகையில், கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் (எண்:20642), 6ம் தேதியில், சேலத்தில் இருந்து திருப்பத்துார், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூரு செல்லும்.
வழக்கமான வழித்தடமான, சேலம் - தர்மபுரி - ஓசூர் வழியில் பயணிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, பெங்களூருவில் இருந்த கோவை வரும் ரயில் (எண்:20641) கிருஷ்ணராஜபுரம் - திருப்பத்துார் - சேலம் வழியில் ரயில் இயக்கப்படும். ஓசூர், தர்மபுரி வழியாக இயக்கப்பட மாட்டாது என, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.