/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பருவ மழை காலங்களில் ஏற்படும் மின் பிரச்னை தீர்க்க குழு அமைப்பு
/
பருவ மழை காலங்களில் ஏற்படும் மின் பிரச்னை தீர்க்க குழு அமைப்பு
பருவ மழை காலங்களில் ஏற்படும் மின் பிரச்னை தீர்க்க குழு அமைப்பு
பருவ மழை காலங்களில் ஏற்படும் மின் பிரச்னை தீர்க்க குழு அமைப்பு
ADDED : மே 18, 2025 10:59 PM
கோவை, ; கோவையில், தென்மேற்கு பருவ மழை காலங்களில் ஏற்படும் மின் விபத்துகளுக்கு உடனடியாக தீர்வு காண, மின்வாரியத்தில் உபகோட்ட அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில், தென்மேற்கு பருவ மழை துவங்க இருக்கிறது. சில நாட்களுக்கு முன், பலத்த காற்று வீசியதில், சித்தாபுதுார் பகுதியில் 17 மின் கம்பங்கள் வரிசையாக சரிந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மின்வாரியத்தினர் விரைந்து வந்து, அவற்றை அகற்றி, புதிய மின் கம்பங்களை நட்டனர். ராம்நகர் அன்சாரி வீதியில் ஒரு மின் கம்பம் உடைந்து, கார் மீது விழுந்தது. அன்னுாரில் ஒரு கடை மீது மின் கம்பம் விழுந்தது.
மாவட்டம் முழுவதும் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதனால், மின்வாரியம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக, கோவை மண்டல மின் பகிர்மான தலைமை பொறியாளர் குப்புராணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எதிர்வரும் தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு, கோவை மண்டல மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் கம்பிகள் மற்றும் இதர தளவாடப் பொருட்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு கோட்டத்திலும், உபகோட்ட அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு கருவிகள்மற்றும் மரக்கிளைகளை அகற்றும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
குடிநீருக்கான மின் இணைப்புகள், மருத்துவமனைகளுக்கான மின் இணைப்புகள் போன்ற அதிமுக்கிய மின் இணைப்புகளுக்கு, தடையில்லா மின்சாரம் வழங்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' என கூறியுள்ளார்.