/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனமழை எதிரொலி; பில்லூர் அணையில் பேரிடர் மீட்பு படையினர் மீண்டும் பள்ளிக்கு போக குழந்தைகளை பழக்கணும்
/
கனமழை எதிரொலி; பில்லூர் அணையில் பேரிடர் மீட்பு படையினர் மீண்டும் பள்ளிக்கு போக குழந்தைகளை பழக்கணும்
கனமழை எதிரொலி; பில்லூர் அணையில் பேரிடர் மீட்பு படையினர் மீண்டும் பள்ளிக்கு போக குழந்தைகளை பழக்கணும்
கனமழை எதிரொலி; பில்லூர் அணையில் பேரிடர் மீட்பு படையினர் மீண்டும் பள்ளிக்கு போக குழந்தைகளை பழக்கணும்
ADDED : மே 26, 2025 11:12 PM

மேட்டுப்பாளையம், ; சிறுமுகை, மேட்டுப்பாளையம், பில்லூர் அணை என 3 இடங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர் என கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் தெரிவித்தார்.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, மேட்டுப்பாளையம் பவானி ஆற்று பாலத்தில், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், ரூரல் எஸ்.பி. கார்த்தியேன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின், செய்தியாளர்களிடம் கலெக்டர் பவன்குமார் கூறியதாவது:-
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பில்லூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது.
இதையடுத்து, அணையின் நான்கு ஷட்டர்களும் திறக்கப்பட்டன. அப்போது, வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது காலை 10.20 மணி அளவில் நீர் அளவு குறைந்து15 ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதில் இருந்தே காவல்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை வழங்கி வருகின்றனர்.
சிறுமுகை, மேட்டுப்பாளையம், பில்லூர் அணை என 3 இடங்களில் மொத்தம் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள பாதிப்பை அடுத்து 17 வீடுகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பவானி, நொய்யல் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
----மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
மேட்டுப்பாளையம்--கோத்தகிரி சாலையில் குஞ்சப்பனை அருகே சாலையோரம் இருந்த மரம் ஒன்று முறிந்து கீழே சாலையில் விழுந்தது. இதனால் கோத்தகிரி சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர், போலீசார் விரைந்து சென்று, மரக்கிளைகளை இயந்திரங்கள் வாயிலாக வெட்டி எடுத்து, அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
---- சூலுாரில் மிதமான மழை
சூலுார் வட்டாரத்தில், 25 ம்தேதி மழை பெய்ய துவங்கியது. அனைத்து கிராமங்களிலும் விட்டு, விட்டு மழை இரவு முழுக்க பெய்தது. 25 ம்தேதி காலை, சூலுார் வட்டாரத்தில், 22.2 மி.மீ.,மழையும், சுல்தான்பேட்டையில், 26 மி.மீ., அரசூரில், 12 மி.மீ., மழை அளவு பதிவானது.
நேற்று காலை முதல் தூரல் மழை பெய்தது. மதியம் சின்னியம்பாளையம், நீலம்பூர், அரசூர், கருமத்தம்பட்டி, சூலுார் மற்றும் சுல்தான்பேட்டை சுற்றுவட்டார கிராமங்களில் மிதமான மழை பெய்யத்துவங்கியது. நேற்று காலை, 8:00 மணிக்கு, சூலுரில், 18.40 மி.மீ.,சுல்தான்பேட்டை, 22 மி.மீட்டரும், அரசூரில், 15 மி.மீட்டரும் மழையளவு பதிவானது. மிதமான மழை பெய்து வருவதால், இதுவரை பாதிப்பு எதுவும் இல்லை.
போக்குவரத்து நெருக்கடி
சின்னதடாகம், துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தார் சாலை அல்லாத மண் சாலைகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்வதால், போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது. துடியலூர் அருகே உள்ள உருமண்டம்பாளையம் ரோடு, ஜி.என்., மில்ஸ் பிரிவு, சுப்பிரமணியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் சேரும், சகதியுமாக காணப்படுகின்றன.
இது குறித்து, கோயம்புத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்க செயலாளர் தேவேந்திரன் கூறுகையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட உருண்ட பாளையம் ரோட்டில் பாதாள சாக்கடை திட்டத்தில் பெருங்குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அவை சரிவர மூடப்படாததால், இப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மேலும் பல இடங்களில் வடிகால் வசதி இல்லாததால், பெய்யும் மழை நீர் குளம், குட்டை போல ரோட்டில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.
சாலைகளை சீரமைக்கவும், தொடர் மழையின் போது மக்கள் இடையூறு இல்லாமல் வாகனங்களில் செல்லவும், மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.