/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராமத்துக்கு குடிநீர் ஒதுக்கீடு முறைப்படுத்த மக்கள் கோரிக்கை
/
கிராமத்துக்கு குடிநீர் ஒதுக்கீடு முறைப்படுத்த மக்கள் கோரிக்கை
கிராமத்துக்கு குடிநீர் ஒதுக்கீடு முறைப்படுத்த மக்கள் கோரிக்கை
கிராமத்துக்கு குடிநீர் ஒதுக்கீடு முறைப்படுத்த மக்கள் கோரிக்கை
ADDED : பிப் 06, 2024 01:48 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, கிராமத்துக்குரிய குடிநீர் ஒதுக்கீட்டை முறையாக வழங்க வேண்டும் என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி அருகே, தென்குமாரபாளையம் ஊராட்சியில் குடிநீர் முறையாக வினியோகம் இல்லாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த மக்கள் கூறியதாவது:
தென்குமாரபாளையம் ஊராட்சியில், கடந்த மூன்று மாதங்களாக மழை பொழிவு இல்லாத காரணத்தால், உள்ளூர் நீர் ஆதாரங்கள் அனைத்தும் முற்றிலும் வறண்டு போயுள்ளன.
அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில், ஆற்றில் தண்ணீர் இருந்தும் மின்தடை இல்லாத போதிலும், கிராமத்துக்கு குடிநீர் ஒதுக்கீடான தினமும், 90 ஆயிரம் லிட்டர் முறையாக கொடுப்பதில்லை.
கடந்த, 20 நாட்களுக்கு மேலாகியும், தண்ணீர் வழங்கப்படாததால் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளோம். ஊராட்சி நிர்வாகம் வாயிலாக, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
எனவே, கிராமத்துக்கு, திட்ட ஒதுக்கீடான, 90 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.