/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.ஜி அறக்கட்டளை நிறுவனர் தின விழா
/
பி.எஸ்.ஜி அறக்கட்டளை நிறுவனர் தின விழா
ADDED : ஜன 26, 2024 01:24 AM
கோவை;பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் , 98 வது நிறுவனர் தினவிழா நிகழ்வு நேற்று நீலாம்பூரில் உள்ள, பி.எஸ்.ஜி., ஐ.டெக்., கல்லுாரி அரங்கில் நடந்தது. நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமைவகித்து நிகழ்ச்சிகளை துவக்கிவைத்தார்.
இந்நிகழ்வில், அறக்கட்டளை சார்பில், சமூக மேம்பாட்டிற்காக பங்களித்த மூவர் பல்வேறு துறைகளில் தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்தனர்.
பிரிக்கால் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் மோகன் பங்கேற்று பி.எஸ்.ஜி., அறக்கட்டளையின் செயல்பாடுகள், சேவைப்பணிகள் குறித்து பேசினார்.
மேலும், இதில், பி.எஸ்.ஜி., சேவரத்தினா விருது அரவிந்த் கண் மருத்துவமனை தலைவர் நம்பெருமாள் சாமிக்கும், பி.எஸ்.ஜி., விஸ்வா ஞான ரத்தின விருது அணுசக்தி ஆணையத்தின் தலைவர் அஜய்குமார் மொகாண்டி மற்றும் ஐ.ஐ.டி., கான்பூர் பேராசிரியர் மணிந்திரா அகர்வால் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டது.
இதில், அணுசக்தி ஆணையத்தின் தலைவர் அஜய்குமார் மொகாண்டி தவிர மற்ற இருவர் நேற்றைய நிகழ்வில் பங்கேற்று விருதை பெற்றுக்கொண்டனர்.
இதில், பி.எஸ்.ஜி., அறக்கட்டளை குழுவினர், பி.எஸ்.ஜி., குழுமத்தின் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

