/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
122 ரன் எடுத்த ரெயின்போ கிரிக்கெட் கிளப் அணி வீரர்
/
122 ரன் எடுத்த ரெயின்போ கிரிக்கெட் கிளப் அணி வீரர்
122 ரன் எடுத்த ரெயின்போ கிரிக்கெட் கிளப் அணி வீரர்
122 ரன் எடுத்த ரெயின்போ கிரிக்கெட் கிளப் அணி வீரர்
ADDED : ஜூன் 17, 2025 10:57 PM

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில், இரண்டாவது டிவிஷன் போட்டி பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது.
ரெயின்போ கிரிக்கெட் கிளப் அணியும், திருப்பூர் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. பேட்டிங் செய்த ரெயின்போ கிரிக்கெட் கிளப் அணியினர், 50 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 372 ரன்கள் எடுத்தனர். வீரர்கள் ஹரிஹரன், 122 ரன்களும், மவுலி ராஜ், 64 ரன்களும், ஆதித்யன், 52 ரன்களும், ராமநாராயணன், 52 ரன்களும், சாதிக் அல் அமீன், 42 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய, திருப்பூர் கிரிக்கெட் கிளப் அணியினர், 27 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பு, 90 ரன்கள் எடுத்தபோது மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ரன் ரேட் அடிப்படையில் ரெயின்போ கிரிக்கெட் கிளப் அணி, 110 ரன்கள் வித்தியாசத்தில், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.