/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூட்டுறவு வங்கி உடனடி கடன் மேளா 701 பேர் விண்ணப்பங்கள் அளிப்பு
/
கூட்டுறவு வங்கி உடனடி கடன் மேளா 701 பேர் விண்ணப்பங்கள் அளிப்பு
கூட்டுறவு வங்கி உடனடி கடன் மேளா 701 பேர் விண்ணப்பங்கள் அளிப்பு
கூட்டுறவு வங்கி உடனடி கடன் மேளா 701 பேர் விண்ணப்பங்கள் அளிப்பு
ADDED : ஜூன் 14, 2024 06:30 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் உடனடி கடன் மேளா நடந்தது.
இந்த உடனடி கடன் மேளாவில், பொதுமக்களுக்கு சேமிப்பு கணக்கு துவங்கப்பட்டு மகளிர் சுய உதவிக்குழு கடன், உதியம் பெறும் மகளிர் கடன், அதரவற்ற விதவைபெண் கடன், மாற்றுத்திறனாளி கடன், சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் கடன், வீட்டு வசதி கடன், வீடு அடமான கடன், விவசாயம் சார்ந்த மத்திய காலக்கடன், நாட்டுப்புற கலைஞர்களுக்கான கடன், டாம்கோ, டாப்செட்கோ, தனிநபர் மற்றும் குழுக்கடன்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இதில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் கோமதி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கடன் மனுக்களை வழங்கினார்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் விஜயகுமார், உதவி திட்ட அலுவலர் மகளிர் திட்டம் செல்வக்குமார், உதவி பொதுமேலாளர்கள் பலராமன், அருள், இளங்கோ, மலர்விழி, குமரேஷ், மற்றும் வங்கி பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்த கடன் மேளாவில், பெண்ணாடம், திட்டக்குடி, வேப்பூர், தொழுதுார், கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம், எறையூர், மங்களூர் ஆகிய கிளைகளை சேர்ந்தவர்களிடமிருந்து 701விண்ணப்பங்கள் பெறப்பட்டது.