/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் பா.ம.க., ஆர்ப்பாட்டம்
/
சிதம்பரத்தில் பா.ம.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 23, 2024 02:26 AM

சிதம்பரம் : பா.ம.க., தலைவர் அன்புமணி மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறக்கோரி, தமிழக அரசை கண்டித்து, சிதம்பரத்தில் பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலூர் தெற்கு மாவட்ட பா.ம.க., சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் தலைமை தாங்கினார். வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி, பா.ம.க., தெற்கு மாவட்ட தலைவர் தேவதாஸ் படையாண்டவர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் திலிப்ராஜன், வழக்கறிஞர் ராஜவேல் வரவேற்றனர்.
மாவட்ட துணை செயலாளர் ராஜா, துணை செயலாளர் அசோக், மாவட்ட துணைத் தலைவர் புளிங்குடி சரவணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் குமார், இளையராஜா, அருள், மணியன், தமிழ், சத்தியமுர்த்தி, சின்னமணி, கமல், சரவணன், செல்வப் பிரதீஷ், ஜெகன், விஷ்ணு, கார்த்திக், ஸ்ரீராம், ஜெயக்குமார், ஒன்றிய நகர செயலாளர்கள் பிரபு, மதன், கருணா, ஆனந்த், காளிமுத்து, கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.