/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் கடை கேட்டு மஞ்சக்குழி மக்கள் மனு
/
ரேஷன் கடை கேட்டு மஞ்சக்குழி மக்கள் மனு
ADDED : ஜூலை 23, 2024 02:25 AM

கடலுார் : ரேஷன் கடை அமைக்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
புவனகிரி அடுத்த மஞ்சக்குழியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனு:
எங்கள் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நாங்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு 3 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ள பி.முட்லுார் ரேஷன் கடைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவருக்கும் மிகவும் சிரமமாக உள்ளது. ஆட்டோக்களில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கிச்செல்வதற்கு நுாறு முதல் 150 ரூபாய் வரை செலவாகிறது. எனவே, எங்கள் கிராமத்தில் ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.