/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காலை உணவு திட்டம்: கடலுாரில் கலெக்டர் ஆய்வு
/
காலை உணவு திட்டம்: கடலுாரில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூலை 23, 2024 12:05 AM

கடலுார் : கடலுார் அருகே பெரியகங்கணாங்குப்பம், உச்சிமேடு ஊராட்சி பள்ளிகளில், முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை, கலெக்டர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
கடலுார் மாவட்டத்தில், முதல்வர் காலை உணவு திட்டம் 1,182 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 67,563 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர். இந்நிலையில், கடலுார் அருகே பெரியகங்கணாங்குப்பம் ஊராட்சி நடுநிபைப் பள்ளி, உச்சிமேடு ஊராட்சி துவக்கப் பள்ளிகளில் நேற்று காலை உணவு வழங்குவதை, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு வழங்கிய உணவை ருசி பார்த்தார்.
அப்போது, மாணவர்களுக்கு காலை உணவை சுவையாகவும், சுகாதாரமான முறையில் தயாரித்து வழங்க அறிவுறுத்தினார். மேலும், பள்ளி வளாகத்தை துாய்மையாக பராமரிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது சத்துணவுத் திட்ட நேர்முக உதவியாளர் தேவராசன், மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ருதி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.