/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., சேர்மனுக்கு தலைமை நிர்வாக அதிகாரி விருது
/
என்.எல்.சி., சேர்மனுக்கு தலைமை நிர்வாக அதிகாரி விருது
என்.எல்.சி., சேர்மனுக்கு தலைமை நிர்வாக அதிகாரி விருது
என்.எல்.சி., சேர்மனுக்கு தலைமை நிர்வாக அதிகாரி விருது
ADDED : ஜூலை 14, 2024 06:05 AM

நெய்வேலி : என்.எல்.சி., சேர்மன் பிரசன்னா குமார் மோட்டுப்பள்ளிக்கு, பெருநிறுவன மேலாண்மை மற்றும் புதுமையான தலைமைத்துவ சிறப்புக்கான, சிறந்த தலைமை நிர்வாக அதிகாரி விருது வழங்கப்பட்டது.
ஒடிசா, புவனேஸ்வரில் நடந்த 24ம் ஆண்டு ஜியோ மைன்டெக் சர்வதேச கருத்தரங்கில் இவ்விருது வழங்கப்பட்டார். இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் தங்கப்பத்தம், உயர் கல்வியில் நான்கு பிரிவுகளில் எம்.பி.ஏ., பட்டம் பெற்றுள்ளார்.
என்.எல்.சி., சேர்மனாக பொறுப்பேற்ற பிறகு, நிறுவனம் சுரங்கங்களுக்கு தேவையான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிலைத் தன்மையுடனான வளர்ச்சி போன்றவற்றிற்கான முயற்சிகளில் பல்வேறு முன்னேற்றங்களை நிறுவனம் அடைந்துள்ளது.
குறிப்பாக, நெய்வேலியில் உள்ள சுரங்கப்பணிகள் நிறைவுற்ற சமன்படுத்தப்பட்ட நிலத்தில், 50 மெகாவாட் திறன்கொண்ட சூரிய ஒளி மின்சக்தி திட்டம் நிறுவப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம், புதுப்பிக்கத்தக்க பசுமை எரிசக்தி மூலம், சுரங்க எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. 2023--24ம் நிதியாண்டில், நிறுவனம் 36 மில்லியன் டன் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி உற்பத்தியை எட்டியுள்ளது.
நிலக்கரி அமைச்சகத்தின் மதிப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்நிறுவனம் தங்கள் சுரங்கங்களுக்கான 13 ஐந்து நட்சத்திர மதிப்பீடுகளை பெற்றுள்ளது. இந்த சர்வதேச கருத்தரங்கில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுரங்கத்துறை வல்லுநர்கள் பங்கேற்றனர்.