ADDED : ஜூலை 14, 2024 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் மத்திய மாவட்ட காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய மாவட்ட தலைவர் திலகர் தலைமை தாங்கினார். நகர தலைவர்கள் வேலுச்சாமி, ரவிக்குமார் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை குறித்து அவதுாறாக பேசிவரும் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணி, சுந்தரமூர்த்தி, மாநில ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார், வட்டார தலைவர்கள் ராஜா ராமகிருஷ்ணன், ஜனார்த்தனம், குலோத்துங்கன், மாவட்ட நிர்வாகிகள் நாகராஜன், பிரகாஷ், அம்பலவாணன்பேட்டை ஊரட்சி தலைவர் ராமச்சந்திரன் பங்கேற்றனர்.