/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுழற்சி முறையில் ரேஷன் பொருட்கள் வழங்க கோரிக்கை
/
சுழற்சி முறையில் ரேஷன் பொருட்கள் வழங்க கோரிக்கை
ADDED : ஜூலை 14, 2024 11:23 PM
மந்தாரக்குப்பம்: கெங்கைகொண்டான் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அதிக எண்ணிக்கையில் கார்டுதாரர்கள் உள்ளதால் ரேஷன் பொருட்கள் வாங்க காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கெங்கைகொண்டான் பேரூராட்சியில் உள்ள ரேஷன் கடையில் 1,000 க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு போதிய இடவசதியின்றி ரேஷன் கடை இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
ரேஷன் கார்டுதாரர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் முதியவர்கள், வயதானவர்கள், பெண்கள் வெகு நேரம் காத்திருந்து ரேஷன் பொருட்களை வாங்கி செல்லும் நிலை உள்ளது.
எனவே கெங்கைகொண்டான் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்களை வாங்க காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்கவும், ரேஷன் பொருட்கள் சூழற்சி முறையில் தினசரி 100 பேருக்கு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.