/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுவாமி ஊர்வலத்தில் தகராறு; திட்டக்குடி அருகே பரபரப்பு
/
சுவாமி ஊர்வலத்தில் தகராறு; திட்டக்குடி அருகே பரபரப்பு
சுவாமி ஊர்வலத்தில் தகராறு; திட்டக்குடி அருகே பரபரப்பு
சுவாமி ஊர்வலத்தில் தகராறு; திட்டக்குடி அருகே பரபரப்பு
ADDED : ஜூலை 22, 2024 01:54 AM

திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த ஆவட்டி கிராமத்தில் சுவாமி ஊர்வலத்தின் போது இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ஆவட்டி கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாரியம்மன் கோவில் திருவிழா துவங்கியது.
நேற்று அம்மன் வீதியுலா நடந்தது. அப்போது சிலர் தங்கள் தெருக்களின் வழியாக ஊர்வலம் வரவேண்டும் என்றனர். அதற்கு கிராம முக்கியஸ்தர்கள், வழக்கமான வழியிலேயே சுவாமி ஊர்வலம் நடைபெறும் என தெரிவித்தனர்.
இதனால் அதிருப்தியடைந்த ஒருதரப்பினர், சுவாமி ஊர்வலத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ராமநத்தம் போலீசார் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருதரப்பினரும் அவரவர் கருத்தில் உறுதியாக இருந்ததால் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.
இதனையடுத்து தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.