/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின் கட்டண உயர்வை வாபஸ் பெற அரசுக்கு த.மா.கா., கோரிக்கை
/
மின் கட்டண உயர்வை வாபஸ் பெற அரசுக்கு த.மா.கா., கோரிக்கை
மின் கட்டண உயர்வை வாபஸ் பெற அரசுக்கு த.மா.கா., கோரிக்கை
மின் கட்டண உயர்வை வாபஸ் பெற அரசுக்கு த.மா.கா., கோரிக்கை
ADDED : ஜூலை 23, 2024 12:07 AM

கடலுார் : மின் கட்டண உயர்வை, அரசு வாபஸ் பெற வலியறுத்தி, கடலுாரில் கலெக்டரிடம் தா.ம.க., வினர் மனு அளித்தனர்.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் குறைக்கேட்பு கூட்டத்தில் த.மா.கா., மாவட்டத் தலைவர் நெடுஞ்செழியன், மாநில நிர்வாகிகள் வக்கீல் வேல்முருகன், புரட்சிமணி, ரஜினிகாந்த், நாகராஜன், அன்பு ஆகியோர் புதிய கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் வீட்டு வரி, சொத்துவரி, மின் கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம், குப்பை வரி, குடிநீர் வரி என வரிகளை உயர்த்தி, மக்கள் மீது சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர்.
இந்நிலையில் அரசு மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை எளிய, நடுத்தர மக்கள், சிறு குறு வியபாரிகள், தொழில் நிறுவனங்கள், சிறு குறு வணிகர்கள், விசைத்தறி நெசவாளர்கள் என பல தரப்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
எனவே, மத்திய அரசை குறை கூறாமல், உயர்த்திய மின் கட்டணத்தை தமிழக அரசு உடன் திரும்ப பெற வேண்டும். மேலும், மின் உற்பத்திக்கு சூரிய ஒளி மின் ஊக்குவிப்பு திட்டம், காற்றாலை மின் ஊக்குவிப்பு திட்டம் போன்றவைகளை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.