/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சத்தியவாடியில் விவசாயிகள் கூட்டம்
/
சத்தியவாடியில் விவசாயிகள் கூட்டம்
ADDED : ஜூன் 29, 2024 05:54 AM
விருத்தாசலம் : விருத்தாசலம்அடுத்த சத்தியவாடி கிராமத்தில், வேளாண் துறை சார்பில், 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ், விவசாயிகள் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஊராட்சி தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். விருத்தாசலம் வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
வேளாண் அலுவலர் சுகன்யா, விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ள பண்ணை கருவிகள், தார்பாய், ஜிப்சம், பேட்டரி தெளிப்பான் குறித்து விளக்கினார்.
கருவேப்பிலங்குறிச்சி ஸ்டேட் பாங்க் மேலாளர் சுவாமியம்மாள், துணை மேலாளர் பிரமோத் சாகர் ஆகியோர், விவசாய கடன் அட்டை பயன்கள் மற்றும் வங்கி மூலம் வழங்கப்படும் அனைத்து வகை விவசாய கடன்களைப் பெறுவது குறித்து பேசினர்.
ஆத்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் உமாமகேஸ்வரி, உதவி வேளாண் அலுவலர் ராஜீவ்காந்தி, ஆத்மா திட்ட தொழில்நுட்ப அலுவலர்கள் மதிவாணன், தேவேந்திரன் மற்றும் கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.