/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அடிப்படை வசதிகள் நிறைவேற்றம்; 30வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பெருமிதம்
/
அடிப்படை வசதிகள் நிறைவேற்றம்; 30வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பெருமிதம்
அடிப்படை வசதிகள் நிறைவேற்றம்; 30வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பெருமிதம்
அடிப்படை வசதிகள் நிறைவேற்றம்; 30வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பெருமிதம்
ADDED : ஜூன் 29, 2024 05:55 AM

கடலுார் : 'மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது' என, கடலுார் மாநகராட்சி 30வது வார்டு தி.மு.க., கவுன்சிலர், திருப்பாதிரிப்புலியூர் பகுதி மண்டலக்குழுத் தலைவர் சங்கீதா செந்தில்முருகன் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மாவட்ட செயலாளர், அமைச்சர் பன்னீர்செல்வம் வழிகாட்டுதல்படி கடலுார் மாநகராட்சி 30வது வார்டில் மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
கண்ணகி நகர், பழனிசாமி உள்ளிட்ட நகர் பகுதிகளில் தார் சாலையும், முருகா நகர், நரம்பன் நகர், வரவூர் மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் சிமென்ட் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.
வார்டு முழுதும் எல்.இ.டி., தெரு மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. கரையேறவிட்டகுப்பத்தில் புதிய தகன மேடை கட்டப்பட்டுள்ளது.
வாடகை கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடையை சொந்த கட்டடத்திற்கு மாற்றவும், கூட்டுறவு நகரில் புதிய பூங்கா அமைக்கவும் மாநகராட்சியில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
வண்டிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், பழுதடைந்த கட்டடத்தில் இயங்கி வருவதால் மழைநீர் கசிவு ஏற்படுகிறது.
இதனால், சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் தேவை என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு சங்கீதா கூறினார்.