
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் அடுத்த பில்லாலி திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
நெல்லிக்குப்பம் அடுத்த பில்லாலி திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 2ம் தேதி துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடந்து வந்தது. நேற்று முன்தினம் அர்ஜீனன் திரவுபதி திருக்கல்யாணம் உற்சவமும், நேற்று மாலை அர்ஜூனன் சமேதராய் திரவுபதி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.